தமிழ்ப் புத்தாண்டை துவக்கி வைக்கும் தை மாதப் பிறப்பு பரவாயில்லை. இந்த ஆண்டு மகம் நட்சத்திரத்தில் தான் பிறக்கிறது. மகம் கேதுவின் நட்சத்திரம். மகம் நட்சத்திரத்திற்கு ஏழரை சனி அதாவது ஜென்ம சனி நடக்கிறது. ஆகையால் மகம் நட்சத்திரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் உலகமெங்கும் வன்முறைகள், சண்டை சச்சரவுகள் எல்லாம் பாதிக்கும்.
மேஷம் -தை மாதப் பிறப்பு மேஷ ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. பிற்பகுதிதான் சிறப்பாக உள்ளது. முற்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். இடையூறுகள் ஏற்படும். ஆவணி மாதத்திற்குப் பிறகு (ஆகஸ்ட் 14) நிலைமை சீரடையும். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். செலவினங்கள் அதிகமாகும். உறவினர் பகை அதிகரிக்கும். பிள்ளைப்பேறு போன்றவை ஏற்படும். ஆவணிக்குப் பிறகு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தற்போது வேலையில் இருப்பவர்கள் அதே இடத்தில் நீடிப்பது நல்லது. வேறு வேலை கிடைக்கிறது என்று இருக்கிற வேலையை விட்டு விட்டு வர வேண்டாம். அப்படி வருவதாக இருந்தால் போகிற வேலைக்கு உத்திரவாதம் பெற்றுக் கொண்டு போகவும்.
ரிஷபம் -ரிஷப ராசிக்காரர்களுக்கும்கஷ்ட நேரம்தான். ஆனால் மாசியில் (பிப்ரவரி 24ஆம் தேதியில்) இருந்தே நல்ல நேரம் துவங்குகிறது. அதன் பிறகு வருவாய் அதிகரிக்கும். வீட்டில் குதூகலம் ஏற்படும். எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். ஆனால் தாயின் உடல்நிலை பாதிக்கும். நான்கில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்து ஏற்படலாம். அரசு காரியங்களில் சின்ன சின்ன சிக்கல்கள் குறைபாடுகளைக் கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. சொந்தப் பிரச்சினைகள் ஏற்படும். அதனை சமாளிக்கும் வகையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்டி முடிப்பார்கள், புதுமனை புகுவார்கள்.
மிதுனம் -தைப் பிறப்பு பெரிய பலமாக இருக்கும். உடனடியாக முன்னேற்றம் ஏற்படும். அதாவது பங்குனியில் (மார்ச் 6ஆம் தேதியில்) இருந்து இவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கிறது. நீண்ட நெடுங்காலமாக முடிக்க முடியாமல் இருந்த விஷயங்கள் எல்லாம் முடியும். மன மகிழ்ச்சி ஏற்படும். அக்டோபரில் இருந்து சில பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் அக்டோபரில் சனி 4ம் இடத்திற்கு மாறுவதால் தாயாரின் உடல் நிலை பாதிப்பு ஏற்படும். வாகன விபத்து, வாகன பழுது ஏற்படும். மற்றபடி மிதுன ராசிக்கு புதிய உற்சாகம், புதிய மாற்றம், புத்துணர்ச்சி கொடுக்கும் வருடமாக அமையும்.
கடகம் -கடக ராசிக்காரர்களுக்கு 2வது வீட்டில் தை மாதம் பிறக்கிறது. தனஸ் ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் அவர்களுக்கு நல்ல ஆண்டாகவே இருக்கும். சித்திரையில் (ஏப்ரல் 5ஆம் தேதியில்) இருந்து நல்ல நேரம் பிறக்கும். அப்போதில் இருந்து எல்லா வெற்றிகளும் கிட்டும். குடும்பத்தில், வேலையில் சந்தோஷம் கிட்டும். நவம்பர் மாதத்தில் இருந்து இன்னும் சிறந்த நேரம் உண்டு. குழந்தை பாக்கியம், திருமணத் தடை நீங்கும்.
சிம்மம் -சிம்ம ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களது ராசியிலேயே தை மாதம் பிறக்கிறது. அவர்களுக்குச் சில இடையூறுகள் ஏற்படும். அதாவது உடல் உபாதைகள்தான் ஏற்படும். அறுவை சிகிச்சை, விபத்து, உறவினர், நண்பர்கள் இழப்பு போன்றவை ஏற்படும். மிகவும் நெருக்கமாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். அதனால் அவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவது போன்றவை கூட ஏற்படும். இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். பாதிப்புகளை உண்டாக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரே பலம் என்னவென்றால், ஒரே வீட்டில் சுக்கிரன் ஏப்ரல் மாதம் வரை இருப்பதுதான். அதனால் அவர்களுக்கு பணப் புழக்கம் இருக்கும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதனை தாண்டி வருவதற்கு அது ஒன்று பலனளிக்கும்.
No comments:
Post a Comment